Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

மார்ச் -4 கும்பகோணம் SIP அபக்கஸ் நிறுவனத்தின் 3 ம் ஆண்டு துவக்க விழா.

இன்றைய வேகமாக போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் தங்களது மூளைத்திறனை வளர்த்துக்கொள்ள உருவாக்கப் பட்ட ஒரு கற்றல் முறையே அபக்கஸ் ஆகும்.
 இன்று உலகம் பூராகவும் முழுமையாகவும், வேகமாகவும் பரவி வருகிறது இந்த கற்தினறி.
   மாணவர்கள் இந்த கற்தினறியை கற்பதின் மூலம் தங்களது கல்வியை சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள உதவும். மேலும் பொறுமையாக இருந்து படிப்பதற்கான மனபக்குவம் கிடைக்கிறது.
இதன் மூலம் மாணவர்களுடைய ஞாபக சக்தி,தன்னம்பிக்கை, அவர்களுடைய ஆக்கசக்தி,ஒரு விஷயத்தை பற்றிய துல்லியமான பார்வை,மற்றும் கவனக்குவிப்பு ஆகிய நன்மைகள் கிடைப்பதால் பெற்றோர்களால் இந்த கற்றல் முறை மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் அமைந்துள்ள SIP அபக்கஸ் அகாடமி ஆனது வெற்றிகரமாக தனது 3ம் வருட ஆண்டு விழாவை குடந்தை ஜனரஞ்சனி ஹாலில் மாலை 4 மணியளவில் மிகவும் சிறப்பாக கொண்டாடியது.
இதில் SIP அபக்கஸ் அகாடமியின்  மாநில தலைவர் திரு.ரவிசங்கர் மற்றும் ஏரியா தலைவர் திரு.லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விழாவில் 200 மேற்பட்ட மாணவர்களுக்கு லெவல் முழுமை பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக SIP அகாடமி கும்பகோணம் திரு.வினோத் நன்றியுரை நிகழ்த்தினார்.

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *