Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

முதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்

பட்டுக்கோட்டை: கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பட்டுக்கோட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.

கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். கஜா புயலில் பட்டுக்கோட்டை மாவட்டம் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. அங்கு 1 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் மொத்தமாக வீழ்ந்துவிட்டது.

Gaja Storm: TN CM visits the Cyclone affected Pattukottai

இந்த நிலையில் பட்டுகோட்டையில் சூரப்பள்ளம் உள்ளிட்ட புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஆய்வு செய்தனர்.

அங்கு புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விழுந்திருக்கும் தென்னை மரங்களை பார்வையிட்டனர். மேலும் விவசாயிகளிடம் இழப்பு குறித்த பேசினார்கள்.

இந்த நிலையில் புயல் நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார் முதல்வர். மரங்கள் விழுந்ததற்கும், வீடுகள் இடிந்ததற்கும் நிவாரண நிதிகளை வழங்கினார்.

மேலும் புயலால் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினார் முதல்வர். புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 5 பேர் பலியானார்கள். (தஞ்சாவூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *