Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

முறைகேடு நடக்காததால் மேல்முறையீடு செய்துள்ளேன்: முதல்வர்

திருச்சி,
தமிழகத்தில் சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடக்காததால் மேல்முறையீடு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசி சாலைப்பணி. மதுரை சுற்றுச்சாலை பணி. நெல்லை-செங்கோட்டை – கொல்லம் சாலைப்பணி. வண்டலூர் – வாலாஜாபாத் சாலை பணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களில் சாலை சீரமைப்பு பணி ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், முதலமைச்சரின் உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறி, தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ஒப்பந்தம் வழங்கியதில் எந்த முறைகேடும் இல்லை. முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்களை மனுதாரர் தரப்பு வழங்கவில்லை. ஒழிப்புத்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேட்டுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடைய தல்ல என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக இன்று பகலில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முறைகேடு தொடர்பான புகாரில் நியாயமான விசாரணை நடத்தவே சி.பி.ஐ.க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் என் மீது எந்த குற்றமும் சொல்லவில்லை. முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் உள்ளதால் மேல்முறையீடு செய்துள்ளேன்.
கொள்ளிடத்தில் கதவணை கட்ட விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து டெண்டர் விடப்படும். காவிரியில் உபரிநீரை தடுத்து நிறுத்த ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிப்பார். அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்”. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசும்போது, அ.தி.மு.க. ஒரு குடும்பம். அதனை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்களின் சதி திட்டத்தை தொண்டர்களின் ஆதரவோடு முறியடிப்போம். எப்போதுமே அ.தி.மு.க. நிலைத்து நிற்கும் என்றார்.

Check Also

அதிமுக அதிர்ச்சி.. பாமக கடுப்பு.. இனிதான் கூட்டணிக்கு இருக்குது சிக்கல்.. எல்லாம் இவரால்தான்!

சென்னை: ஒரு பேட்டி.. ஒரே ஒரு பேட்டி.. அதிமுக, பாமக என கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது என்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.