Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.! வெற்றி பெறுவது உறுதி.!

வருகிற 11-ந் தேதி நிலக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. இது பற்றி நிலக்கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் நிலக்கோட்டை தொகுதியில் மட்டுமின்றி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 20 தொகுதிகளிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆனால் 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க.வினர் எண்ணிவருகின்றனர். 20 தொகுதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் ரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெற இயலாது.
யார் எவ்வளவு பணம் தந்தாலும் அதனை வாங்கிக் கொண்டு குக்கர் சின்னத்தில் தங்களது வாக்கை அளித்து அ.ம.மு.க. வேட்பாளர்களை தொகுதி மக்கள் வெற்றி பெற செய்வார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடுவதில் தடை உண்டாக்கவோ`, வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்வதற்கான முயற்சிகளையோ மேற்கொள்ள முடியாத வகையில் அனைத்து கட்ட முன்னேற்பாடுகளும் நடந்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

Check Also

விஜய்யை விமர்சிக்கும் எச்.ராஜா..!! மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..!!

சென்னை: ஜோசப் விஜய் மீது எச்.ராஜாவுக்கு ஏன்தான் இவ்வளவு பாசம் என்று தெரியவில்லை. எப்பவுமே விஜய்யை வம்பிழுத்து கொண்டிருக்கிறார். எச்.ராஜா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *