Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ரெட் அலார்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.?

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது.
தொடர்புடைய படம்
இதன் காரணமாக வருகிற திங்கட்கிழமை வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. குறிப்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி) மிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த  நிலையில், மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லாததால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கோவை, நீலகிரி, விருதுநகர் நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
மேலும், அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இல்லாததால், ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும், அக்டோபர் 8 ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.

Check Also

விஜய்யை விமர்சிக்கும் எச்.ராஜா..!! மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..!!

சென்னை: ஜோசப் விஜய் மீது எச்.ராஜாவுக்கு ஏன்தான் இவ்வளவு பாசம் என்று தெரியவில்லை. எப்பவுமே விஜய்யை வம்பிழுத்து கொண்டிருக்கிறார். எச்.ராஜா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *