Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

வழக்குகளில் தொடர்புடையவர்கள் காவல்துறை பணியில் நியமனம் பெற உரிமை இல்லை..?

குற்ற வழக்குகள் இருப்பதை முழுமையாக மறைத்தவர்களுக்கு காவல், சிறை, தீயணைப்பு துறையில் பணி நியமனம் பெற உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்ற வழக்கில் விடுதலை ஆகியிருந்தாலும் அவர்கள் காவலர் பணியில் சேர முடியாது என்று 2013-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, காவல்துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை ஆகியிருந்தாலோ, விடுவிக்கப்பட்டிருந்தாலோ அவர்களையும் குற்றவழக்குடன் தொடர்புடையவராக கருத வேண்டும் என்றும், 

சரிபார்ப்பின் போது குற்ற வழக்கு நிலுவையிலிருந்து பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டால் அடுத்த தேர்வு நடைமுறையில் கலந்து கொள்ள உரிமை கோரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 2017ல் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், குற்றவழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்ததாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்ததை எதிர்த்து 46 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என தீர்ப்பு வழங்கினார். 

குற்ற வழக்கில் சந்தேக அடிப்படையில் விடுதலையானாலும் குற்றவழக்குடன் தொடர்புடையவர்களாகவே கருதலாம் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி, குற்ற வழக்குகளை முழுமையாக மறைத்தவர்களின் விண்ணப்பங்களையும், சந்தேகத்தின் அடிப்படையில் குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றவர்களின் விண்ணப்பங்களையும் நிராகரித்த தேர்வு வாரிய உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார். அதேசமயம் வழக்கு நிலுவையில் இருந்தால் அவர்களை தேர்வில் கலந்து கொள்ளவும், பணி நியமனம் வழங்குவதற்கும் அரசு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.