Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் ஊராட்சி சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தற்போதைய எம்பி, இந்த தொகுதிக்கு என்றைக்காவது வந்துள்ளரா? நல்ல எம்பியை தேர்ந்தெடுங்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கணப்படும் என முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் பொருட்டு திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழி எம்பி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன. இந்நிலையில் நடிகரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.
இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் முறையிட்டனர். தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் குறிப்பிட்ட 7 பிரிவினரை தனியே பிரித்து பழங்குடியினர் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும், அதற்கு சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திமுக ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். எல்லா தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளுக்கு திமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். 
ஆனால் தேவேந்திர குல சமுதாய தலைவர் சிலைகளுக்கு திமுக மரியாதை செலுத்துவது இல்லை. மற்ற தலைவர்கள் போல் எங்கள் தலைவர்களுக்கும் திமுகவினர் மரியாதை செலுத்த வேண்டும் என கூறினர். இதைதொடர்ந்து பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “இங்கு சொல்லப்பட்ட பெரும்பாலான பிரச்சனைகள் உள்ளாட்சி அமைப்பால் தீர்க்கப்பட வேண்டியவை. பஞ்சாயத்து அமைப்பு சரியாக இருந்திருந்தால் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்காது. 4 வருடத்துக்கு முன் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் எங்கே திமுக வென்றுவிடுமோ என்ற அச்சத்தில் தான் தேர்தலை நடத்தாமல் உள்ளது இந்த அரசு. 
விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். அவருக்கு உங்களது ஆதரவை அளிக்கவேண்டும். தற்போதைய எம்பி, இந்த தொகுதிக்கு என்றைக்காவது வந்துள்ளரா? நல்ல எம்பியை தேர்ந்தெடுங்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ப்படும். உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறினார்.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோயல், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் டிடிசி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, ஊராட்சி செயலாளர் மாரியப்பன், முன்னாள் எம்பி ஜெயசீலன், திமுக நிர்வாகிகள் கருணாகரன், நடராஜன், சண்முகையா, கிருபாகரன், கபடி கந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முடிவைத்தானந்தேல் கிராமத்தில் திமுக கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் இன்றைய ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.