Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

வெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.! கூறியது என்ன…?

வெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி சம்பந்தனிடம் கூறியது என்ன…?

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு மாகாண அதிகாரத்துக்கு அப்பால் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் தெரிவித்திருப்பது தெற்கில் வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என தேசிய விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கலகம தம்மரங்சி தேரர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்;

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுத்தருவாத அவர் தெரிவிப்பதன் மூலம் தெற்கில் வேறு பிச்சினைகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடும்போது, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு மாகாண அதிகாரத்துக்கு அப்பால் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இது தெற்கில் வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவது தொடர்பாக உளவுத்துறை தகவலை இந்தியாவே எமக்கு ஆரம்பமாக அறிவித்தருந்தது. எமக்கு நேச நாடு என்றவகையில் ராஜதந்திர நடவடிக்கைக்கு அப்பால் சென்று இந்தியா இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் தாக்குதலை கட்டுப்படுத்த முடிந்திருக்கும்.எனவே, பாரிய தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்று முடிந்து குறுகிய காலத்துக்குள் இந்திய பிரதமர் எமது நாட்டுக்கு விஜயம் செய்ததை பல கோணத்திலும் சிந்திக்கவேண்டியிருக்கின்றது என்றார்.நேற்று முன்தினம் முற்பகல் கொழும்பு வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளதை சுட்டிக்காட்டினார். இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ இந்தியா ஆகக்கூடிய கரிசனை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.இந்த கோரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கும் போது, இது தொடர்பில் ஏற்கனவேயும் என்னிடம் வலியுறுத்தியுள்ளீர்கள்.நீங்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். கூட்டமைப்பின் பயண ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளும்படி அங்கிருந்த இந்திய தூதர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.இதேவேளை, பலாலி விமான நிலையத்தில் சிறிய விமானங்களையாவது சேவையில் ஈடுபடுத்தலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இது குறித்து கவனம் செலுத்துமாறு தூதரக அதிகாரிகளிடம் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.