Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

வேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது!

வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகள் வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. வேலூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலெட்சுமி போட்டியிட்டு உள்ளார்.

வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 118874 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 105623 வாக்குகள் பெற்றுள்ளார்.

என்ன நிலை

என்ன நிலை

அதிமுக 13000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து சுற்று வாக்குகள்தான் எண்ணப்பட்டு இருக்கிறது என்பதால் என்னவேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது.இந்த நிலையில் இதில் நாம் தமிழர் கட்சி 6000 வாக்குகள் பெற்றுள்ளது.

யார்

யார்

நாம் தமிழர் கட்சி இரண்டு மற்றும் மூன்றாவது சுற்றில் வேகம் எடுத்து அதிகமான வாக்குகள் பெற்று வருகிறது.இந்த தேர்தல் முடிவில், நாம் தமிழர் கட்சிதான் வெற்றியாளரை முடிவு செய்யும் சக்தியாக உருவெடுத்துள்ளது. திமுக அதிமுக இடையே 13000 வாக்குகள் வித்தியாசம்தான் இருந்து வருகிறது.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

இந்த வித்தியாசம் இனி குறைய கூட வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான் நாம் தமிழர் பெறும் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் தமிழர் 7000+ வாக்குகள் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.r

Check Also

ரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்!

சென்னை: நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இடையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக சண்டை நடந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.