Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஸ்டெர்லைட் ஆலைத் தொழிலாளர்களின் முற்றுகைப் போராட்டம்! தொடர் உண்ணாவிரதமென அறிவித்திருப்பதால் பரபரப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணை மற்றும் இந்த ஆணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், ஆலையைத் தொடங்க ஏதுவாக மின்னிணைப்பை  வழங்க தமிழக அரசு இன்னும் முன்வராத நிலையில், ஆலையை உடனே தொடங்க உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு வலியுறுத்தி, இதில் பணியாற்றி வருகின்ற நிரந்தர பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த பணியாளர்களும் ஆலையின் நுழைவாயில் முன்பு ஒன்றுகூடி போராட்டத்தை வரும் திங்ககளமியிலிருந்து தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

ஏறக்குறைய 500 தொழிலாளர்கள் பங்கேற்கவிருக்கும் இப்போராட்டம், தங்களது போரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை  உண்ணாவிரதப் போராட்டமாக இருக்கும் என்றும் இத்தொழிலாளர்கள் அறிவித்திருக்கின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியிலும் மற்றும் தூத்துக்குடி நகரம் முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இதனைச் சார்ந்துள்ள பிற தொழில் நிறுவனங்கள் பயன்பெற்று வந்தனர்.  உலகின் மிகச்சிறந்த தாமிர உருக்காலைகளுள் ஒன்றாக இயங்கி, பலகோடி ரூபாய் பங்களிப்பை இந்தியஅரசின் கருவூலத்திற்கு வழங்கியதோடு, தாமிர இறக்குமதியை தவிர்த்ததன் மூலம், கோடிக்கணக்கான ரூபாய்க்கு அந்நியச் செலாவணியை மிச்சம் செய்ததில் ஸ்டெர்லைட் ஆலையின் பங்களிப்பு மிகப்பெரியதாகும்.  இத்தகைய நிலையில், அதனை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த ஆணையினால் கடந்த சில மாதங்களாக இது இயங்காமல் இருப்பதும், இதனால் எண்ணற்றோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியிருப்பதும் கவலைக்குரியதாக இருக்கிறது.  

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் மற்றும் நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களின் நலன்கருதி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் தொடங்கவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணை மற்றும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டும் இப்போராட்டம் ஸ்டெர்லைட் ஆலைத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலைத் தொழிலாளர்களின் இப்போராட்டத்தின் விளைவாக அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் தொடங்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.