Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி தூத்துக்குடியில் உண்ணாவிரதம் !

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ஏஜன்சி, போக்குவரத்து உள்ளிட்ட  6 க்கும் மேற்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்கள் இன்று(22.02.2019) தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான முரளிரம்பாவை சந்தித்து அவரிடம் மனுக்களை கொடுக்க வந்தனர்.

அந்த மனுக்களில்,  ’’தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் தூத்துக்குடி மக்களுக்கு பெரிய அளவில் நன்மைதான் இருந்து வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு, நீர் மாசு மற்றும் மக்களின் உடல்நலம் பாதிப்பு பற்றி அரசு எந்த அறிக்கையையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

எனினும் துருதிருஷ்டவசமாக தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலை திறக்க உத்தரவு வரவில்லை. இது தூத்துக்குடி மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உச்சநீதி மன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது சம்மந்தமாக உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி, மேலும் தாமதப்படுமோ என நாங்கள் அஞ்சுகிறோம்.

எனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மக்களின் ஆழ்ந்த துயரத்தையும் வருத்தத்தையும் அரசுக்கு தெரிவிக்கும் விதமாக வரும் 24.02.2019 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் அடையாள உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்துள்ளோம்.

அதற்கு தாங்கள் தயவு கூர்ந்து அனுமதி வழங்க வேண்டுகிறோம். எங்களது உண்ணாவிரதம் அமைதியாக எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி நடைபெறும் என்பதை இதன் மூலம் உறுதியளிக்கிறோம்’’ என்று கூறப்பட்டிருந்தது.

Check Also

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.