Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி மீனவ சமுதாய மக்கள், நாடார் சமுதாய மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு மற்றும் உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவ சமுதாய மக்கள் இயக்கம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தூத்துக்குடி மீனவ சமுதாய மக்களும், நாடார் சங்கத்தினரும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:

சில அந்நிய சக்திகளின் தூண்டுதலின் பேரில், அப்பாவி மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி, ஸ்டெர்லைட் ஆலை இயங்கவிடாமல் தடுக்கப்பபட்டுள்ளது. மேலும்   போராட்டம் நடத்துவதற்கு இவர்களுக்கு பணமும், நிதிஆதரவும் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், பல தொழில் நிறுவனங்களும், தூத்துக்குடி நகரின் வர்த்தக செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு, எண்ணற்றோர் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் அவலத்தை அரசுஉணர்ந்து, பசுமை தீர்ப்பாய உத்தரவை மதித்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவேண்டும். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டே ஸ்டெர்லைட் ஆலையை மூடச்செய்வதற்கான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும்  மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்த அளவீடுகளுக்கு உட்பட்டே நிலத்தடி நீர் மாசு மற்றும் காற்று மாசு இருப்பதை பசுமை தீர்ப்பாயம்  சுட்டிக்காட்டியிருக்கிறது. 

வதந்திகள் மற்றும் பொய்பிரச்சாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்களால் பசுமை தீர்ப்பாயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ எவ்வித அறிவியல்பூர்வமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க இயலவில்லை. பல சிறு மற்றும் குறு நிறுவனங்களும், போக்குவரத்து தொழிலும், வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்  தூத்துக்குடி பொதுமக்களும்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் கடும் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கின்றனர்.

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக பசுமை தீர்ப்பாயத்தின் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி ஆலையை உடனடியாக திறக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ராங்கியாக த்ரிஷா ?

த்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா? தலைப்பை பார்த்ததும் த்ரிஷா திமிர் பிடித்த ராங்கியாகிவிட்டார் என்று நினைக்க வேண்டாம். …

One comment

  1. மை அண்டோ

    கடைசி வரை இந்த கயவர்களின் பணப் பசி அடங்காது.
    ஜாதி பெயர், தொழில் பெயரை பயன்படுத்தினால் அந்த சமுதாயத்தினரரையோ, தொழில்செய்வோரையோ இழிவுபடுத்தியதாக கருதமுடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.