Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோவிலில் பொதுமக்கள் சிறப்பு பூஜை

தூத்துக்குடி விஸ்வ பிரம்ம விநாயகர் கோவிலில்

மகா சிவராத்திரி விழாஅங்காளி மாசி திருவிழா —-

ஸ்டெர்லைட் சார்பில் பால்குடம், அன்னதானம் —-

ஆலையை மீண்டும் திறக்க பொதுமக்கள் சிறப்பு பூஜை

மகா சிவராத்திரியையொட்டி தூத்துக்குடி விஸ்வ பிரம்ம விநாயகர் கோவிலில் சிவராத்திரி விழா மற்றும் அங்காளி மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை சார்பில் பால்குடம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆலையை மீண்டும் திறக்க சிறப்பு பூஜை செய்தனர்.

தூத்துக்குடி ராஜீவ் நகர் – அசோக் நகர் – பி அன்ட் டி  காலனி சந்திப்பில் அமைந்துள்ள விஸ்வ பிரம்ம விநாயகர், முக்தீஸ்வரர், அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி விழா மற்றும் அங்காளி மாசி திருவிழா கடந்த 3-ந்தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழா இன்றுடன் முடிவடைகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை சார்பில் நேற்று (6-ந்தேதி) காலை  பாலிடெக்னிக் பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து அங்காள பரமேஸ்வரி கோவில் வரை 108 பால்குடம் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை மூடியதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இந்த ஆலையுடன் தொடர்புடைய சிறு தொழில் நிறுவனங்களின் தொழில்களும் முடங்கியதால் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, இதிலிருந்து மீண்டு வர ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் செழிக்கவும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

இவ்விழாவில் கோவில் அர்ச்சகர் சிவ சித்தர் செல்வராஜ், சுடலை மாடன் – காளி உபாசகர் சங்கர் அய்யர்,  சுப்பிரமணியன், கமிட்டி உறுப்பினர் சந்திரமணி, மாரியப்பன் மற்றும் கோவில் நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

இவ்விழாவில் ஸ்டெர்லைட் ஆலை சார்பாக பொது மேலாளர்கள் ராதாகிருஷ்ணன், சர்வேசன்,  குமாரவேந்தன், டாக்டர் கைலாசம் ஆகியோரும், பணியாளர்கள் ஜெயா, குருதாண்டவன், சீனிவாசன், அருணாச்சலம், சுப்பையா, லிங்கசுதன், முத்துக்குமார், பாலநாராயணன்  மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மோகன், திருமுருகன், கேசவ மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

One comment

  1. These goons are not worried of people died in an encounter and brutally killed by this protest.instead they conduct pooja for opening of sterlite.shame on the people and its participants particularly from sterlite employees and local people who gave them permission for perform in temple which they have tarnished image of tamilians.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.