Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி நன்றாக கிளிக் ஆகவே தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு 40 இடங்களில் 39 இடங்களை திமுக கூட்டணி வென்றது. ஆனால் தற்போது அந்த திமுக கூட்டணிக்குள் புதிய குழப்பம் …

மேலும் படிக்க

ரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்!

சென்னை: நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இடையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக சண்டை நடந்து வருகிறது. காஷ்மீர் பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் பிரிவினையை ஆதரித்தார். ரஜினி தனது பேச்சில், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் …

மேலும் படிக்க

விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.!!

புதுக்கோட்டை: விபத்தில் காயமடைந்து விழுந்துகிடந்த பெண்ணின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிவதை பார்த்ததும், பதறி அடித்து கொண்டு வந்த அமைச்சரும் டாக்டருமான விஜயபாஸ்கர் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, குளத்தூர் இளையாவயல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே வரும்போது, ஒரு பெண் கீழே ரத்தம் கொட்டிய நிலையில் விழுந்து கிடந்தார்.  சாலைவிபத்து …

மேலும் படிக்க

பாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி?

வேலூர்: வேலூரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக போட்ட திட்டம் மிக சரியாக வேலை செய்துள்ளது. அதிமுக அங்கு வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 1,051301 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . 5 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து …

மேலும் படிக்க

கேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி!

வேலூர்: வேலூரில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 141423 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 125726 வாக்குகள் பெற்றுள்ளார். …

மேலும் படிக்க

இப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக? மத்திய அரசின் அதிரடி முடிவு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது புதிய அதிரடி முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது. மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரமும் …

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.!!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நாட்டு மக்களுக்கு நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யது மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலில் ராஜ்யசபாவில்இதற்கான மசோதாவை தாக்கல் செய்த அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசன பிரிவு 370 இனி …

மேலும் படிக்க

புதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி!

சென்னை: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை தமிழக பாஜக பாட்டு பாடி வரவேற்றுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தானது 1949-ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது கொடுக்கப்பட்டது. இந்த சிறப்பு அந்தஸ்தை இன்று மத்திய அமைச்சரவை ஒன்று கூடி முடிவு செய்து ரத்து செய்துவிட்டது. இதை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் ஜம்மு- காஷ்மீர் இந்தியாவுடன் …

மேலும் படிக்க

லாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..!!

கடலூர்: 17 வயசு பெண்ணை ஏமாற்றி.. பல முறை உல்லாசம் அனுபவித்து.. கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவருக்கு வயசு 37. இந்த பகுதியின் அதிமுக பிரமுகராகவும் உள்ளார். இவர் 17 வயது சிறுமியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெருங்கி பழகி உள்ளார். கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த மார்ச் …

மேலும் படிக்க

குழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.!!

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்ரீகர்களும் சுற்றுலா பயணிகளும் வெளியேறுமாறு அரசு அறிவித்ததை அடுத்து பெட்ரோல் பங்க்குகள், ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதுகிறது. காஷ்மீரில் உள்ள அமர்நாத் லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லுமாறு மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சிறப்பு …

மேலும் படிக்க