Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

பரோலில் வெளிவந்த சசிகலா சாதித்தது என்ன?

தனது கணவர் நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா இன்று சிறைக்கு திரும்புகிறார். பரோலில் வெளிவந்த சசிகலாவிற்கு போயஸ்கார்டனில் தங்க வேண்டும் என்பதே ஆசையாக இருந்ததாம். ஆனால், தமிழக அரசு அதை நினைவிடமாக்க இருப்பதாக அறிவித்திருப்பதால் அங்கு தங்க முடியாத சூழ்நிலை. எனவேதான் இளவரசியின் வீடு அமைந்துள்ள தி.நகர் இல்லத்தில் தங்க வேண்டியதாயிற்று. அதோடு, அவர் யாரையும் சந்தித்து …

மேலும் படிக்க

தினகரனுக்கு கடிவாளம் போட ஜெய் ஆனந்தை களம் இறக்கும் சசிகலா!

தனது கணவர் நடராஜனுக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி 5 நாட்கள் அவசர பரோலில் வந்துள்ள சசிகலா சில அதிரடி திட்டங்களை வகுத்துள்ளதாகவும், அதில் தினகரனுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பரோலில் வந்துள்ள சசிகலா சென்னை தி நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு சசிகலா வந்ததில் இருந்து அவருடன் தங்கி இருக்கும் நபர்களில் ஒருவர் சசிகலாவின் தம்பி …

மேலும் படிக்க

சிபிஐ விசாரணையை நோக்கி வாக்கி டாக்கி ஊழல்? எடப்பாடிக்கு அதிர்ச்சியளிக்க உள்ள ஆளுநர்.!

தமிழக காவல்துறையை நவீனமயமாக்க வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு எதிராக இந்த ஊழல் தற்போது பூதாகரமாக எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பொதுவாக வாக்கி டாக்கி வாங்குவதற்கான டெண்டர் ஒதுக்கும்போது பல நிறுவனங்கள் பங்கேற்கும். அதில், ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியிடும் போது ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே …

மேலும் படிக்க

சீண்டும் ஜெயக்குமார்! ஜெ. விவகாரத்தில் சசிகலா ஏன் அதை செய்யவில்லை?

இன்று தனது கணவர் நடராஜனை காப்பாற்ற இவ்வளவு முயற்சிகளை செய்யும் சசிகலா அன்று ஜெயலலிதாவை காப்பாற்ற ஏன் முயற்சிக்கவில்லை என கடுமையாக சாடியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இந்த அரசை ஜெயலலிதா தான் உருவாக்கி தந்தார். வேறு யாரும் உருவாக்கி தரவில்லை. அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. மேலும் அவர் தான் ஸ்லீப்பர் செல் இல்லை என்பது தொடர்பான …

மேலும் படிக்க

உளவுத்துறை ரொம்ப பிஸி! தீவிர கண்காணிப்பில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை தமிழக உளவுத்துறை மூலமாக கண்காணித்து வருவதாகவும், அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய உளவுத்துறை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. சசிகலா பரோலில் வெளியே வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச முயற்சிப்பார் என கூறியிருந்தோம். அதே போல இளவரசியின் மகன் விவேக் மூலம் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி பலனற்றதாய் போனது. எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் …

மேலும் படிக்க

மருத்துவமனையில் கண்ணீர் விட்ட சசிகலா…!கணவரை காப்பாற்றுங்கள்!

பரோலில் இருந்து வெளியே வந்த சசிகலா இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் கொடுத்து சிறைத்துறை நிர்வாகம் நேற்று அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து சென்னை வந்ந சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், சென்னை …

மேலும் படிக்க

அதிருப்தியில் ஓபிஎஸ்! கீழே உட்கார வைத்து அவமதித்த எடப்பாடி.!

தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் வருகை புரிந்தனர். இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. …

மேலும் படிக்க

தீவிர கண்காணிப்பு! சசிகலா கணவர் நடராஜனுக்கு செயற்கை சுவாசம்..!

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று பரோலில் வந்துள்ள சசிகலாவின் கணவருமான நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார் சசிகலா. முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை …

மேலும் படிக்க

போட்டுடைத்த தீபா! சசிகலாவுக்கு கணவர் மீது பாசம்லாம் இல்லை; அவர் வந்தது இதற்காகத்தான்…!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா தனது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு தனது கணவர் நடராஜன் மீது பாசம்லாம் ஒன்னும் இல்லை, அவர் வந்தது அரசியல் காய்களை நகர்த்த தான் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். இரட்டையிலை சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தீபா தாக்கல் …

மேலும் படிக்க

நடராஜன் – சசிகலா மருத்துவமனையில் உருக்கமான சந்திப்பு..!

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா இன்று காலை தனது கணவர் நடராஜனை மருத்துவமனையில் சந்தித்தார். தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள்  மட்டுமே கொடுத்து சிறைத்துறை நிர்வாகம் நேற்று அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து சென்னை வந்ந சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் நடராஜனை சந்திக்க …

மேலும் படிக்க