Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

போட்டுடைக்கும் பொன்னையன்! ஜெ.வை சசிகலா இப்படித்தான் ஏமாற்றினார்…!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிரான மனநிலையில் அதிமுக நிர்வாகிகள் பலர் வந்துள்ளனர். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீதே சந்தேகத்தை வைக்கின்றனர் அவர்கள். இந்நிலையில் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அவரை சசிகலா எப்படி ஏமாற்றினார், அவரது நெட்வொர்க் என்ன என்பதை …

மேலும் படிக்க

ஜெயலலிதா உடன் மருத்துவமனையில் இருந்தவர்கள் யார்? தமிழிசை கேட்கிறார்

சென்னை: மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றபோது அவருடன் இருந்தவர்கள் யார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மரண விவகாரத்தில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் அளித்து வரும் முரணான தகவல்கள் அவரது சந்தேகத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. இதனால் ஜெயலலிதா மரண விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க …

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பகீர்! எடப்பாடி தரப்பு மிரட்டுகிறது!

தினகரன் அணியில் இருந்து விலகி தங்கள் அணியில் சேருமாறு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்களை மிரட்டி நெருக்கடி தருவதாக தினகரன் அணியில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இதனையடுத்து அந்த பட்டியலில் உள்ள செந்தில் பாலாஜி மற்றும் பழனியப்பன் ஆகியோர் …

மேலும் படிக்க

பரோலில் வெளி வருகிறார் சசிகலா? நடராஜன் கவலைக்கிடம்

தனது கணவர் நடராஜன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதால், அவரை சந்திப்பதற்காக பரோலில் வெளிவர சசிகலா  விண்ணப்பித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அவருக்கு சமீபத்தில் நுரையீரல் அடைப்பும் ஏற்பட்டது. எனவே, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு டயாலிசிஸ் …

மேலும் படிக்க

தமிழிசை பல்டி! எல்லோர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறவில்லை

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலின் போது, இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் எனக் கூறியிருந்தார். ஆனால், தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானார். ஆனால், அவர் கூறியபடி கருப்புப் பணத்தை மீட்கவும் இல்லை. மக்கள் கணக்கில் இதுவரை பணம் செலுத்தவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்கள் …

மேலும் படிக்க

தினகரனுக்கு அனுமதி மறுப்பு..!நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்..!

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் துவங்கியுள்ளது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் வருகிற செப்டம்பர் 16ம் தேதி, டிடிவி தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. நீட் தேர்வு விலக்கு கோரி பொதுக்கூட்டம் நடைபெறும் …

மேலும் படிக்க

தினகரன் அணிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்! அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை…

அதிமுக பொதுக்குழுவை வரும் 12-ஆம் கூட்ட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்தது. இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்றத்தை நாடினார். இந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் தற்போது குழப்பங்கள் நீடித்து வருவதால் அதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி அணி முடிவெடுத்தது. இதனையடுத்து பொதுக்குழு வரும் 12-ஆம் தேதி …

மேலும் படிக்க

அதிமுக-பாஜக கூட்டணி..! பரிசீலிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…!

தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அரசியல் கட்சியினர் பலரும் கூறுகின்றனர். வரும் தேர்தல்களில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என பலரும் அடித்து கூறுகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரத்தில் இன்று அளித்த பேட்டியில், உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார். முதல்வர் பழனிச்சாமியின் இந்த …

மேலும் படிக்க

மாணவி வளர்மதி விளாசல்! எடப்பாடி பழனிச்சாமி அடிமைதான்..!

            ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த வளர்மதியிடம் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியில் வளர்மதி முதல்வர் எடப்பாடி …

மேலும் படிக்க

இப்படியும் நடக்கலாம்!எடப்பாடி அணியுடன் இணைந்தது தினகரன் அணி!

நீண்ட திரைமறைவு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் ஓபிஎஸ் அணி கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இணைந்தது. அதன் பின்னர் தினகரன் அணி இவர்கள் இருவருக்கும் எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது எதிரியும் கிடையாது என்பது போல எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்தது போல தினகரன் அணி இணையும் செய்தியும் வரும். அதற்கான பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் …

மேலும் படிக்க