Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசியல்

தமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.!! விமானநிலையத்தில் பரபரப்பு !

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது மகன் பாஜக ஒழிக என சொன்னதால் பரபரப்பு ஏற்படுள்ளது. தமிழக பாஜக தலைவர் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். அதேப் போல எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த இடமாக இருந்தாலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுவதிலும் தயக்கம் காட்டாதவர். அதேப்போல இன்று விமான நிலையத்தில் அதிமுக வின் ராஜன் செல்லப்பா கூறியுள்ள கருத்துகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. …

மேலும் படிக்க

‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.!

மேற்குவங்க மாநில அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற அரசியல் ரீதியாக சதி நடைபெறுகிறது என திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் திரிணமூல் கட்சிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் திரிணமூல் கட்சியின் வாக்குச் சதவீதம் 43 சதவீதமாக அதிகரித்தாலும், வெற்றி பெற்ற இடங்கள் 34-ல் இருந்து 22 ஆக குறைந்துவிட்டது. கடந்த …

மேலும் படிக்க

மு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்? தமிழிசை பகீர் தகவல்..!!

சென்னை,  தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அந்த பரிந்துரையில் மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முடிவும் செய்யப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே ஏதோ இந்தி திணித்து விடுவதைப்போல மு.க.ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், ரா.முத்தரசன் போன்றவர்கள் கடுமையான கண்டனத்தை இல்லாத இந்தி …

மேலும் படிக்க

மக்களுக்கு புதிய திட்டங்கள்.! மாஸ்காட்டும் முதல்வர்.!

நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. தன் தந்தை இறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு இவர் முதல்வராகியுள்ளதால் மக்களுக்கு இவர் ஆட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை சற்று பூர்த்தி செய்யும் வகையில் தன் புதிய திட்டங்களால் அதிரடிக் காட்டி வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த மாதம் 30-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றவுடன் …

மேலும் படிக்க

பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்!

நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார். டெல்லி: நரேந்திர மோடி, நாளை பிரதமராக பதவியேற்கும் விழாவில், அண்டை நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இரவு 7 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. …

மேலும் படிக்க

அமைச்சர் சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்!

சென்னை: செந்தில்பாலாஜி பதவி ஏற்கும்போது, திமுக தலைவர் ஸ்டாலின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.. ஆனால் இதே புன்னகை சபாநாயகர் முகத்திலும் தென்பட்டதுதான் ஆச்சரியமே! சபாநாயகர் என்பவர் எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் பொதுவானவர். ஆனால், தமிழகத்தில் ஆட்சிகளுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் அவ்வப்போது கொண்டு வரப்படும் என்பது நடந்துள்ள சமாச்சாரம்தான் என்றாலும், ஒரு சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது ரொம்பவும் அரிதான விஷயம். தேர்தல் முடிவுகள் …

மேலும் படிக்க

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.புதுடெல்லிடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-* பல்வேறு விவகாரகளில் பிரதமர் மோடி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. * தேர்தலில் மோடியும் அமித்ஷாவும்  மிகப்பெரிய அளவில் பணத்தை  செலவு செய்து உள்ளனர்.* மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள …

மேலும் படிக்க

மே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..?

மே 23 ஆம் தேதி பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு அமைக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காமல் போனால், எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் குதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதில்,வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்பி பாஜக மீது புகார் கிளப்ப உள்ளதாகவும் மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள உளவுத்துறை, அரசை எச்சரித்து உஷார்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் …

மேலும் படிக்க

28 ஆண்டு கால வேதனைக்கும் முடிவு கட்டுங்கள்.. ஆளுநருக்கு அற்புதம்மாள் கோரிக்கை ..?

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு 28 ஆண்டுகால வலிக்கும் வேதனைக்கும் முடிவு காண வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. …

மேலும் படிக்க

வாக்களித்த பிரபல நடிகர்கள் மீது குற்றப்பதிவு..? தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி விசாரணை..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.  சென்னை: சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:- வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் குற்றப்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டி உள்ளது. எனவே அதில் காலதாமதம் ஆகலாம். …

மேலும் படிக்க