Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

செய்திகள்

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான தந்தையாக வந்தார். இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் அமிதாப்பசன், டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இதில் பாதிப்புக்கு உள்ளான சில இளம் பெண்களுக்காக கோர்ட்டில் வாதாடி நியாயம் கிடைக்க செய்யும் …

மேலும் படிக்க

23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் பேட்டி

“வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும்” என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரத்தில் பிரசாரத்தின்போது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று (நேற்று) பிரசாரம் முடிவடைகிறது. ஆனால் எடப்பாடியாரின் சாதனைகள் தொடரும். சாதகமான கருத்துக்களை தெரிவிப்பவர்களை மட்டுமே டி.டி.வி.தினகரனுக்கு பிடிக்கும். அவர் பித்தலாட்ட அரசியல் செய்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரை கடுமையாக விமர்சித்து உள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து …

மேலும் படிக்க

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.புதுடெல்லிடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-* பல்வேறு விவகாரகளில் பிரதமர் மோடி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. * தேர்தலில் மோடியும் அமித்ஷாவும்  மிகப்பெரிய அளவில் பணத்தை  செலவு செய்து உள்ளனர்.* மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள …

மேலும் படிக்க

பேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி

பேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி சனி 18, மே 2019 11:03:33 AM (IST) திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பேருந்து மோட்டார்பைக் மோதிய விபத்தில் இருவர் பலியானார்கள்.  வள்ளியூரில் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி அடுத்த சவளக்காரன் குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (55) இவர் மும்பையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சொந்த ஊரில் உள்ள கோவில் கொடை விழாவில் கலந்து …

மேலும் படிக்க

மே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..?

மே 23 ஆம் தேதி பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு அமைக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காமல் போனால், எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் குதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதில்,வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்பி பாஜக மீது புகார் கிளப்ப உள்ளதாகவும் மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள உளவுத்துறை, அரசை எச்சரித்து உஷார்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் …

மேலும் படிக்க

சாலையில் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கணவரின் வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் நிர்வாணமாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மஹாராஷ்டிர மாநித்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்திற்கு பின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு மாவட்டத்தில், பிட்சார் என்ற பகுதியில் கணவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கணவர் அசாம் மாநிலத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத போது அவரது மாமியார் மற்றும் …

மேலும் படிக்க

28 ஆண்டு கால வேதனைக்கும் முடிவு கட்டுங்கள்.. ஆளுநருக்கு அற்புதம்மாள் கோரிக்கை ..?

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு 28 ஆண்டுகால வலிக்கும் வேதனைக்கும் முடிவு காண வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. …

மேலும் படிக்க

சீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..?

நிறம் மாறாத பூக்கள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை விஷ்ணுபிரியா. கடந்த 2014ஆம் வருடம் சித்தார்த் வர்மா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறி க்யூட் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, “நிறம் மாறாத பூக்கள்” சீரியல் மூலம், இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்தவர் விஷ்ணுபிரியா. …

மேலும் படிக்க

வழக்குகளில் தொடர்புடையவர்கள் காவல்துறை பணியில் நியமனம் பெற உரிமை இல்லை..?

குற்ற வழக்குகள் இருப்பதை முழுமையாக மறைத்தவர்களுக்கு காவல், சிறை, தீயணைப்பு துறையில் பணி நியமனம் பெற உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்ற வழக்கில் விடுதலை ஆகியிருந்தாலும் அவர்கள் காவலர் பணியில் சேர முடியாது என்று 2013-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, காவல்துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை ஆகியிருந்தாலோ, விடுவிக்கப்பட்டிருந்தாலோ அவர்களையும் குற்றவழக்குடன் தொடர்புடையவராக கருத வேண்டும் என்றும்,  …

மேலும் படிக்க

கோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்… மருத்துவர் தரும் டிப்ஸ்!

கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக, அக்னி நட்சத்திரத்தின்போது வெப்பத்தின் தாக்கம் கூடுதலாக இருக்கும். அப்போது உடல் சார்ந்த பிரச்னைகள் பலவற்றைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக, அதிக வெயில் காரணமாக, கண்கள் பல வகைகளில் பாதிக்கப்படும். எனவே, மற்ற காலங்களைவிட கோடைக்காலத்தில்தான் கண்மீதான பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை.  கோடைக்காலத்தில் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன… அவற்றைச் சரிசெய்வது எப்படி? என்று விளக்குகிறார் கண் மருத்துவர் நவீன்.  …

மேலும் படிக்க