Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

செய்திகள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்பதாக புகார். நடவடிக்கை எடுக்க கலெக்டர் பிரபாகர் உத்தரவு

ஈரோடு, நவம்பர்1 ஈரோடு தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்றும் லஞ்சம் கேட்பதாகவும் அவ்வப்போது புகார்கள் கூறப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரபாகர் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டரிடம் 2 பேர் வந்தனர். அவர்கள் தயங்கியபடி நின்று கொண்டு இருந்தனர். இதை பார்த்த …

மேலும் படிக்க

குமரி-மதுரை இருவழி ரயில்பாதை திட்டம்: நிதி கிடைத்தும் தெற்கு ரயில்வே தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு

மதுரை திருவனந்தபுரம் இடையேயான இருவழி ரயில்பாதை திட்டத்துக்கான இறுதி ஆய்வுக்கு நிதி ஒதுக்கப்பட்டும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் தாமதத்தால், அகில இந்திய அளவில் நடப்பாண்டு ஒப்புதல் பெற்றுள்ள 14 திட்டங்களில் ஒன்று கூட தமிழகத்துக்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்புபாதையில் சென்னை செங்கல்பட்டு மற்றும் மதுரை திண்டுக்கல் இடையே இருவழிப்பாதை உள்ளது. செங்கல்பட்டு விழுப்புரம் மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் இடையே இருவழிப் …

மேலும் படிக்க

எப்பொழுதும் இல்லாத வகையில் கொடை உள்ளத்துடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திவரும் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உலக தமிழ்ச்சங்கம் மதுரை நிருவாகக் குழு பாராட்டி தீர்மானம்

செ¡னை, நவம்பர், 01. மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்பொழுதும் இல்லாத வகையில் கொடை உள்ளத்துடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ் வளர்ச்சித் துறையினுடைய வரலாற்றிலேயே முத்திரை பதித்துள்ளதை உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை நிருவாகக்குழுப் பாராட்டித் தீர்மானம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பத்தாவது நிருவாகக்குழுக் கூட்டம் சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் …

மேலும் படிக்க

தி இந்து நாளிதழில் பணிபுரியும் ஊழியர்கள் போனஸ் கேட்டு போராட்டம்

தி இந்து நாளிதழில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் குட்வில் தொகை வழங்கக்கோரி நிர்வாக CEOவை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று காலை முதல் நடைபெற்றது.. தி இந்து தொழிற்சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து.தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் முனைவர் க.குமார் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் படிக்க

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இந்த ஆண்டு முதல் கலை, அறிவியல் கல்லூரி

சென்னை ஆர்.கே நகரில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்பட 53 கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் அரசு கலை …

மேலும் படிக்க

சவுதியில் இந்தாண்டு இதுவரை 136 பேருக்கு தலைவெட்டி மரணதண்டனை

சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு மட்டும் 136- பேருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். சவுதி அரேபியா நாட்டில் சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நாட்டில் மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி முனையில் கொள்ளை ஆகிய கொடும் குற்றச் செயல்களுக்கு இஸ்லாமிய ஷராஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன்படி தலையை வாளால் வெட்டியே பெரும்பாலன மரண …

மேலும் படிக்க

சாம்பார் வைக்க மக்கள் பயப்படுகிறார்கள்.. விஜயகாந்த் கவலை

பருப்புக்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் மக்கள் சாம்பார் சமைப்பதையே தவிர்த்து வருகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவலைத் தெரிவித்துள்ளார். வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ள பருப்பு வகைகளை பறிமுதல் செய்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கவேண்டும் என்று அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் அத்தியாவசிய விலை ஏற்றத்தையே தமிழக மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக தாய்மார்களை …

மேலும் படிக்க

மக்களே உஷார்.. ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம்!

ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் கூட்டம் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் நிரம்பி வழியும். சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் இனிப்பு வகைகள், துணிமணிகளை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பட்டாசு உள்ளிட்டவற்றை ரயிலில் கொண்டு …

மேலும் படிக்க

குடிபோதையில் தாலிகட்டிய மணமகன்.. வாழ மறுத்து கழற்றி வீசிய மணமகள்.

தேனி: குடி போதையில் தாலிகட்டிய மணமகனுடன் சேர்ந்து வாழ மணமகள் மறுப்பு தெரிவித்து தாலியை கழற்றிக் கொடுத்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே உள்ள போடி புனரை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் சவுந்தர்யா, 20. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி, 34 என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் ஞாயிறன்று காலை வீரபாண்டியில் கண்ணீஸ்வர முடையார் கோவிலில் நடைபெற்றது. அப்போது மணமகள் சவுந்தர்யா …

மேலும் படிக்க

அமெரிக்காவில் கடிகாரம் செய்ததால் கைது செய்யப்பட்ட மாணவர் கத்தாரில் குடியேறுகிறார்

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவர் அகமது முகமது மேற்படிப்பை முன்னிட்டு குடும்பத்துடன் கத்தார் நாட்டில் குடியேற உள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் அகமது முகமது. வடான் வம்சாவளியைச் சேர்ந்த அகமது புதிய பொருட்களை உருவாக்கு வதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் எதிரொலியாக பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக கடிகாரம் ஒன்றைச் …

மேலும் படிக்க