Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

செய்திகள்

ரஷ்யா விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்த உரிமை இருக்கிறது.. ஒபாமா ஆதரவு

வாஷிங்டன்: நவம்பர், 26. தங்களுடைய வான்பரப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள துருக்கிக்கு உரிமை உள்ளது என்று கூறி ரஷ்யா போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான அமெரிக்கா ஆதரவு ப்ராசிரியா ஆர்மி, அல்நூஸ்ரா முன்னணி மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கங்களுக்கு எதிராக ரஷ்யா விமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்யா போர் விமானம் ஒன்று …

மேலும் படிக்க

தமிழை கட்டாயமாக்கச் சொல்லி பள்ளிகளை நிர்பந்திக்க வேண்டாம் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நவம்பர், 26. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக அறிவிப்பதில் மாநில அரசு அதிக கெடு பிடிகளை காட்ட வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. 2006-ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு, தமிழ் கற்பிப்பு சட்டத்தின் கீழ் தீர்மானம் இயற்றியது. அதனடிப்படையில், மாநிலத்தில் உள்ள ஸ்டேட்போர்டு மற்றும் மெட்ரிகுலேசன் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. …

மேலும் படிக்க

காஷ்மீரில் ஹெலிகாப்டர் விபத்து கேரளாவின் முதல் பெண் விமானி உட்பட 7 பேர் பலி

காஷ்மீர்நவபர், 25. காஷ்மீர் ஹெலிகாப்டர் விபத்தில் கேரளாவின் முதல் பெண் விமானி வர்ஷா உட்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் திரிகுடா மலையில் பிரசித்திபெற்ற வைஷ்ணவி தேவி மலை கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் ஹெலிகாப்டர் மூலம் வைஷ்ணவிதேவி கோவிலுக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பக்தர்கள் பலியானார்கள். அந்த …

மேலும் படிக்க

அரசு பெண்கள் பள்ளி வகுப்பறையில் மது குடித்த 7 மாணவிகள் டிஸ்மிஸ் சிஇஓ நேரில் விசாரணை

நமக்கல் நவம்பர் 25. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வின் போது வகுப்பறையில் மது குடித்த 7 மாணவிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற இருந்த பிளஸ் 1 தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வு கடந்த 21ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வுக்கு …

மேலும் படிக்க

நெல்லை மக்கள் தொடர்புத்துறை அதிகாரி அண்ணா நீக்கம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்

நெல்லை,நவ,25 நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா அப்பொறுப்பில் இருந்து நீக்கி கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியரின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக அண்ணா செயல்பட்டு வந்தார். கடந்த 2014 நவம்பரில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு மாறுதல் ஆனார். வந்த நாள் முதலே, நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் மற்றும் பத்திரிகையாளர்களிடம் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்துள்ளார். அரசு விழாக்களில் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்க …

மேலும் படிக்க

அவிநாசி அனைப்புதூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் கலெக்டர் கோவிந்தராஜ் திடீர் ஆய்வு

நவ.25 திருப்பூர் மாவட்டம், அவிநாசி, அனைப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.கோவிந்தராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி, அனைப் புதூரி அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.கோவிந்தராஜ் நேற்று திடீர் ஆய்வு செய்தார். இக்குடோனில் நியாய விலை கடை களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தரமாக உள்ளதா என்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு …

மேலும் படிக்க

முதலமைச்சர் உத்தரவின் பேரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்;தூத்துக்குடியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது

தூத்துக்குடி,நவ.25 தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என அமைச்சர் சண்முகநாதன் கூறினார். தூத்துக்குடி மாவட்டத் தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக ரோடுகளில் வெள்ள நீர் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதன் கூறியதாவது:&தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஓட்டப்பிடாரம் மற் றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி, அந்தோணியார்புரம், மறவன்மடம், சோரிஸ்புரம், அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் …

மேலும் படிக்க

நீர்வழிகளை ஆக்கிரமித்தால் என்ன நடக்கும்? பாடம் கற்றுத்தந்த மழை: ஐகோர்ட்

சென்னை, நவம்பர், 24. தமிழகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளமானது ஏரி குளங்களை ஆக்கிரமித்தால் எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்படும் என சரியான பாடத்தை கற்றுத் தந்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சென்னையில் மழைநீர் வடிகாலுடன் கழிவுநீர் இணைக்கப் படுவதால் அடைப்புகள் ஏற்படுகின்றன. இந்த அடைப்புகளை மனிதர்களை வைத்து மாநகராட்சி …

மேலும் படிக்க

தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.940 கோடி வெள்ள நிவாரண நிதி மத்திய அரசு ஒதுக்கீடு

டெல்லி: நவம்பர், 24. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை உடனடியாக ஏற்று வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ939.63 கோடி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அடை மழை, பெருவெள்ளத்தால் தமிழகத்தின் பல பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 169 பேரை இந்த மழை வெள்ளம் பலி கொண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் தமிழக மழை …

மேலும் படிக்க

சேதங்களை மதிப்பிட மத்திய குழுவை அனுப்ப ஜெயலலிதா கோரிக்கை

தமிழகத்தில், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால் …

மேலும் படிக்க