Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

செய்திகள்

சாலையோர கடைகள் அமைக்க அனுமதி கோரி திண்டுக்கல் மேயர் வீடு முற்றுகை

திண்டுக்கல்,நவ.8 சாலையோரத்தில் கடைகள் அமைக்க அனுமதி கோரி, மேயர்வீட்டை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மெயின்ரோடு பெரியார் சிலையில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையின் இருபுறத்திலும், மையப்பகுதியிலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த கடைகளினால், அந்த பகுதியில் எந்தவொரு வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. …

மேலும் படிக்க

நாகர்கோவிலில் குற்றத்தடுப்பு ஆலோசனைக் கூட்டம்: ரவுடியிசம், கொள்ளையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை

நாகர்கோவில்,நவ.8 ரவுடியிசம், கொள்ளை சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபடு பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த குற்றத்தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் சூப்பி ரண்டு தர்மராஜன் பேசினார். குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக தர்மராஜன் பதவி ஏற்றார். இதையடுத்து நாகர் கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் வாராந்திர குற்றத்தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு …

மேலும் படிக்க

பீகார் முதலமைச்சராக வரும் 14-ந் தேதி நிதிஷ்குமார் பதவியேற்பு

பீகாரின் முதலமைச்சராக வரும் 14-ந்தேதி நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார். லாலு கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அக்கூட்டணி மொத்தம் 179 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. லாலு பிரசாத் …

மேலும் படிக்க

முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யா தீபாவளி வாழ்த்து

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப் படுவதை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் விளங்கும் என்று கூறியுள்ளார். இந்த …

மேலும் படிக்க

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, திருவாரூர், அரியலூர், வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக துணைவேந்தர் தாண்டவம் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியது. புதுச்சேரிக்கு தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவில் நிலை …

மேலும் படிக்க

இயற்கை பேரிடர் பாதிப்பு உதவிக்கு 24 மணி நேர உதவி எண்கள்

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இயற்கை பேரிடர் பாதிப்பு உதவிக்கு 24 மணி நேர உதவி எண்களை அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் மழை, புயல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிப்பு தொடர்பான  புகார்களுக்கு 1077 என்ற எண்ணையும், மின் வயர் அறுந்தால் 1913 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வாரியம் தொடர்பான புகார்களுக்கு 044 – 45674567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் …

மேலும் படிக்க

மழை காலங்களில் மின்சாதனங்களை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

மழைக் காலங்களில் இடி, மின்னலின் போது தொலைக்காட்சி, கிரைண்டர் மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த  வேண்டாம் என்று மின்சார வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக …

மேலும் படிக்க

சென்னையில் விடாமல் பெய்து வரும் கனமழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருவொற்றியூர், எண்ணூர் , மணலி  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை கொட்டியதால்  சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.  கன மழை காரணமாக  எர்ணாவூர் பேருந்து நிறுத்தம் …

மேலும் படிக்க

தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் கடலூர், நாகை துறைமுகங்களில், 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியது. சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள இது, மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது இன்றிரவு …

மேலும் படிக்க

சென்னை- புதுச்சேரி இடையே நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  சென்னை- புதுச்சேரி இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியது. புதுச்சேரிக்கு தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள …

மேலும் படிக்க