Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தலைப்புச் செய்திகள்

பேப்பர் எங்கடா.. ஷூ காலால் மிதித்த காக்கி சட்டைகள்.. அடிக்காதீங்க சார்.. வலிக்குது.. ஷாக் வீடியோ

லக்னோ: இளைஞர் ஒருவரை 2 போலீசார்கள் எகிறி எகிறி காலால் எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் கடுமையாகப்பட்டு உள்ளது. இதன் விதிமுறைகளும் தீவிரமாக்கப்பட்டு, அபராத தொகையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டிராபிக் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிறைய பிரச்சனைகள், தகராறுகள், வாக்குவாதங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. ஒருசிலர் இந்த அபராத தொகையை கேள்விப்பட்டவுடனயே ஆத்திரத்தில், தங்கள் பைக்கையே கொளுத்தி விட்டு …

மேலும் படிக்க

வேலூரில் சிக்கிய போலி மருத்துவர்கள்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

தமிழகத்தில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூன்றும் சேர்ந்து 35 குழுக்களாகப் பிரிந்து நடத்திய சோதனையில் 19 போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர். வேலூர் மாவட்டம் முழுவதும், போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. மேலும் மருத்துவர்களிடம் உதவியாளராக இருப்பவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் போன்றோர் தங்களது வீடுகளில் கிளினிக் வைத்தும், தனியாக கிளினிக் நடத்தியும் மருத்துவம் பார்த்து வருவதாகவும் தெரியவருகிறது. 10ஆம் வகுப்பைக் …

மேலும் படிக்க

தனியார் பள்ளிகளுக்கு இணையாக கம்ப்யூட்டர் லேப், ஸ்மார்ட் கிளாஸ் என அசத்தும் கிராமத்து அரசு நடுநிலைப்பள்ளி: ஆண்டுதோறும் உயரும் மாணவர் எண்ணிக்கை

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே, கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கம்யூட்டர் லேப்,  ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என அசத்தி வருவதால்,தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் இப்பள்ளியை தேடி வருகின்றனர். தமிழகத்தில் அரசுப்பள்ளி என்றாலே,பெற்றோர்கள் அலறியோடும் நிலை தான் இன்னமும் காணப்படுகிறது. இந்த நிலையை மாற்ற,பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி,சமூக ஆர்வம் கொண்ட அந்தந்த பகுதி வாழ் பொதுமக்களும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோன்ற ஒரு சமூக பங்களிப்புடன்,சேலம் …

மேலும் படிக்க

ஆதாரங்களை அமலாக்கத்துறை மீடியாக்களில் கசிய விட்டுடுச்சு.. கபில் சிபல் பரபரப்பு புகார்

சென்னை: ப சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் இன்று தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை மீடியாக்களில் கசிய விட்டுள்ளதாக வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டி உள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரத்தின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று பட்டியலிடப்படவில்லை. இதனிடையே ப சிதம்பரத்தை பண மோசடி வழக்கில் கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை ப …

மேலும் படிக்க

பாசிச சக்திகள் விதைக்கும் விஷ விதைகள்.. அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அறிவுலக மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலையை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயல் மிகக் கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வன்முறையாளர்களால் நேற்று அம்பேத்கர்சிலை உடைக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் தமிழகம் முழுவதும் …

மேலும் படிக்க

டெல்லியை உலுக்கிய திமுக போராட்டம்.. திருமாவளவன் மட்டும் மிஸ்ஸிங்.. எங்கே போனார்… காரணம் இதுதானாம்!

சென்னை: டெல்லியை ஒரே நாளில் திரும்பி பார்க்க வைத்த திமுக போராட்டத்தில், திருமாவளவன் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்ன காரணம்? டெல்லிக்கு போகாமல் திடீரென பின்வாங்கிவிட்டார் என்று சொல்லப்படுவது ஏன்? யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன.. குரல் கொடுத்தன.. கண்டனம் தெரிவித்தன.. …

மேலும் படிக்க

5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் தாறுமாறு சரிவு.. தடுமாறும் நிப்டி, சென்செக்ஸ்

டெல்லி: பங்குச் சந்தைகள் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று சரிவுடன் துவங்கியுள்ளன. நாட்டின் பார்லே முதல் பல துறைகளிலும் ஆள் குறைப்பு செய்யும் அளவுக்கு பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில்தான், பங்குச் சந்தையும் அவ்வப்போது ஷாக் கொடுத்து வருகிறது. இன்று காலை வர்த்தகம் துவங்கியதுமே, பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. பிப்ரவரி மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 10,700 …

மேலும் படிக்க

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி நன்றாக கிளிக் ஆகவே தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு 40 இடங்களில் 39 இடங்களை திமுக கூட்டணி வென்றது. ஆனால் தற்போது அந்த திமுக கூட்டணிக்குள் புதிய குழப்பம் …

மேலும் படிக்க

ரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்!

சென்னை: நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இடையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக சண்டை நடந்து வருகிறது. காஷ்மீர் பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் பிரிவினையை ஆதரித்தார். ரஜினி தனது பேச்சில், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் …

மேலும் படிக்க

விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.!!

புதுக்கோட்டை: விபத்தில் காயமடைந்து விழுந்துகிடந்த பெண்ணின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிவதை பார்த்ததும், பதறி அடித்து கொண்டு வந்த அமைச்சரும் டாக்டருமான விஜயபாஸ்கர் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, குளத்தூர் இளையாவயல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே வரும்போது, ஒரு பெண் கீழே ரத்தம் கொட்டிய நிலையில் விழுந்து கிடந்தார்.  சாலைவிபத்து …

மேலும் படிக்க